Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 15 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் சட்டவிரோத இளவயது கருக்கலைப்புகள் அதிகரித்து வருவதாகவும் பிரபல பாடசாலை மாணவிகள் இதில் உள்ளடங்குவதாகவும் தமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தின் கலாச்சாரப் பிறழ்வும், சமூகச்சீரழிவுச் செய்பாடுகளும் சட்டத்திலிருந்து தப்பித்துக் கொண்டாலும் மனச்சாட்சிக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இளம் பெண் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்துடன் இளவயது பெண்பிள்ளைகள் விடயத்தில் கூடிய அக்கறை எடுத்து அவர்களின் படிப்பு, பாதுகாப்பு இரண்டு விடயங்களில் பெற்றோர் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Ruban Thursday, 16 June 2011 04:01 AM
இது தான் வடக்கின் வசந்தம்
Reply : 0 0
xlntgson Thursday, 16 June 2011 09:14 PM
இங்கே குளிர்நாடுகளில் போல திருமண வயதை அதிகரித்து கொண்டே போனால் இது தான் நடக்கும்.
பிள்ளை பெறாமல் பார்த்துக்கொள்ள அவர்கள் திருமணமானவர்களாக இருப்பின் casual அவசர கதியில் உறவு கொள்வதை தடுத்து இம்மாதிரியான விபரீதங்கள் ஏற்படா. பதின்மர் வயதில் பரீட்சைப்பட விரும்புவதில் பெற்றோர் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தும் பயன் கிடைத்தது போல் தெரியவில்லை. பெரிய பிள்ளைகளை யாராவது கூட்டிக்கொண்டு வந்து விட்டு கூட்டிக்கொண்டு போகும் நிலையில் தான் கல்வி இருக்கிறது. வீட்டுக்கல்வி என்னாயிற்று? வேலை உத்தரவாத கல்வியில்லை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
30 minute ago
20 May 2025