2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மானிப்பாயில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மானிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சிவதாரணி சதாசிவம் (வயது 32) என்பவரின் சடலமே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
தாய் மற்றும் சகோதரனின் குடும்பத்தினருடன் இந்தப் பெண் வசித்து வந்துள்ளார்.  வீட்டில் யாரும் இல்லாத வேளையில் குறித்த பெண் தூக்கில் தொங்கியதாக பொலிஸாருக்கு தாயார் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X