2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம் இன்று பிற்பகல்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 17 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் இராணுவத்தினர் குழப்பம் விளைவித்த சம்பவம் தொடர்பில் தமிழ் மக்களுக்கு விளக்கமளிக்கும் அவசரக் கூட்டமொன்று யாழ். தழிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்

ஜனநாயக ரீதியிலான எமது தேர்தல் பிரசாரத்தை இராணுவத்தினர் கரம் கொண்டு அடக்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்  இக்கூட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X