Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Super User / 2011 ஜூன் 17 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுமாயின் அரசாங்கத்தின் மற்றுமொரு பங்காளிக் கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த யாழ் மாநகர சபை தேர்தலின் போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு பிரதி மேயர் பதவி தருவதாக கூறி ஏமாற்றியமையினாலேயே ஈ.பி.டி.பியுடன் இணைந்து போட்டியிட விருப்பமில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதனால் எதிர்வரும் வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மயில் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என அவர் குறிப்பிட்டார்.
கடந்த யாழ் மாநகர சபை தேர்தலின் போது ஈ.பி.டி.பி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டன.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை கைப்பற்றியத்திற்கினங்க ஒரு வருட காலத்திற்கு பிரதி மேயர் பதவி வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சர் றிசாட் பதியுதீனுடனான சந்திப்பில் உறுதியளித்திருந்தார்.
எனினும் இந்த உறுதிமொழி இதுவரை நிறைவேற்றப்படாமையினாலேயே வட மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆதரவுடன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தல், கிழக்கு மாகாண சபை தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் போன்ற பல தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
mam.fowz Saturday, 18 June 2011 03:33 PM
ஐயோ ஐயோ !!
நான் செய்வது தவறு .
ஆனால் மத்தவர் அந்த தவறை எமக்கு செய்தல்.
கோபம் பொங்குது ....தனக்கு வந்தால் தேரியும்.
விதானையும் ரோஷமும் இப்போதாவது அது
வருகுதா என்று பார்போம் !!
Reply : 0 0
rina Sunday, 19 June 2011 02:01 AM
சரியாக சொன்னிங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
18 minute ago
20 May 2025