2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் யாழில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 13 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிளிநொச்சி வலய தொண்டர் ஆசிரியர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை காலை   அமைதியான முறையில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ். வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால்  இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

'போரினால் பாதிக்கப்பட்ட எமக்கு ஆசிரியர் நியமனம் புறக்கணிப்பா?', 'பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு முடிவு என்ன?', 'கிளிநொச்சி தொண்டர் ஆசிரியர்களுக்கு மாத்திரம் ஆசிரியர் நியமனம் புறக்கணிப்பா?' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவனுக்கு மகஜரொன்றை கையளிக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X