2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காப்பற் வீதிகளாக மாறும் யாழ். மாநகரசபை வீதிகள்

Menaka Mookandi   / 2011 ஜூலை 13 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.மாநகரசபை எல்லைக்குட்பட்ட 33 வீதிகள் 447 மில்லியன் ரூபா செலவில் காப்பற் வீதிகளாக புனரமைப்பு செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

யாழ். கைலாச பிள்ளையார் கோவில் வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிறுவர் வலுவூட்டல் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலஸ்ரின், யாழ். நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X