2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழில் அகற்றப்படாதுள்ள தேர்தல் பிரசார சுவரொட்டிகள்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 21 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள் நேற்று புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தபோதிலும்,  யாழ். மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் இன்னமும் அகற்றப்படாதுள்ளது.

தேர்தல் பிரசாரம் முடிவடைந்த நிலையில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் பொலிஸாரினால் அகற்றப்படுவது வழமையாகும். இந்த நிலையில், சில சுவரொட்டிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளபோதிலும்  குறிப்பிட்ட கட்சியின் சுவரொட்டிகள் மற்றும் வீதிகளில்  கீறப்பட்ட சின்னங்களும் காணப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

தற்போது கட்சிகளின் வேட்பாளாகள் வீடு வீடாக தனிப்பட்ட முறையில் சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X