Kogilavani / 2011 ஓகஸ்ட் 06 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்கள் மத்தியில் அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. குடும்ப வன்முறைகளினால் பெண்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை பற்றிய முறைப்பாடுகள் தமக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமர் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீளக்குடியேறிய பகுதிகளில் குறிப்பாக சில பிரதேசங்களில் கலாசாரப் பிறழ்வுகள் தாரளமாக நடைபெற்று வருவகின்றன. துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளன.
மீளக்குடியேறிய பகுதிகளில் உள்ள மக்களின் அண்மைக்கால செயற்பாடுகள் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளன. அவர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல், சமூகமயமாகல் மற்றும் கலாசார விழுமியங்களை பாதுகாப்பது தொடர்பாக அறிவூட்டப்பட வேண்டிய தேவை தற்போது எமுந்துள்ளது.
இதற்கு சமூக தெண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட் வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago