2025 மே 19, திங்கட்கிழமை

அல்லைப்பிட்டி கார் விபத்தில் படுகாயமடைந்திருந்த மற்றைய நபரும் மரணம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 22 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். அல்லைப்பிட்டி சந்தியில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்

திருநெல்வேலி ஆடியபாத வீதியைச் சேர்ந்த அருமை நாதன் தவநாதன் (வயது 67) இவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்றவர் கொக்குவிலைச் சேர்ந்த எஸ்.சஜீபன் (வயது 26) வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனலிக்காது உயிரிழந்துள்ளார்

அல்லைப்பிட்டி கடற்படை முகாமுக்கு அண்மித்தாக இந்தக் கார் சென்று கொண்டிருந்தபோது அது கட்டுப்பாட்டை மீறி பனை மரம் ஒன்றுடன் பலமாக மோதியதனையடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

குறிப்பிட்ட கார் பாரிய சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X