2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ் உணவு விற்பனை நிலையங்களுக்கு சுகாதார தரச்சான்றிதழ்கள் வழங்க திட்டம்

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்திலுள்ள உணவு விற்பனை நிலையங்களின் தரம் குறித்தும் அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமானவையா என்பது குறித்தும் அவதானித்து 2012ஆம் ஆண்டு தொடக்கம் சுகாதார தரச் சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

யாழில் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவு விற்பனை நிலையங்களை தடைசெய்வதற்கு தரச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும், பாவனையாளர்கள் சுகாதாரமான உணவுகளை வாங்குவதற்கு இந்த தரச்சான்றிதழ் பயன்படும் எனவும் மேற்படி பணிமனை தெரிவித்துள்ளது.

யாழில் அதிகரித்து வரும் நோய்த்தாக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான ஒரு செயற்திட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. எதிர்காலத்தில் தரமான சுகாதாரமான உணவுகளை விற்பனை செய்வதற்கு இந்த தரச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X