2025 மே 17, சனிக்கிழமை

நுளம்பு பெருகும் விதமாக வீட்டுச் சூழலை வைத்திருந்த நபருக்கு பிடியாணை

Menaka Mookandi   / 2012 ஜனவரி 13 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நுளம்பு பெருகும் விதமாக வீட்டுச் சூழலை வைத்திருந்த நபருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணையொன்றை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்றிற்கு மூன்று தடவை அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டும் வருகை தராமல் நீதிமன்றை அவமதித்த குற்றத்திற்காக அவரை பகிரங்கமாக கைது செய்யுமாறு யாழ். நீதிபதி மா.கணேசராச பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வீட்டுச் சூழலை நுளம்பு பெருகுமாறு வைத்துள்ள நபர் தலைமறைவாக இருப்பதாக யாழ்.பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்ததை அடுத்து இந்த உத்தரவை யாழ்.நீதிவான் பிறப்பித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .