2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்தில் பெண்கள் மீதான வன்முறை அதிகரிப்பு : சட்ட வைத்திய அதிகாரி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                      (ரஜனி)
யாழ். மாவட்டத்தில் குடும்ப பிரச்சினைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் சமுதாயத்தில் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் தெரிவித்தார்.

'பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிப்புக்கு காரணம் தன்னம்பிக்கையின்மை மற்றும் எதிர்காலம் பற்றிய கனவுகள் இல்லாமையே.

அனலைதீவுப் பகுதியில் கணவனால் மனைவி அடித்து சித்திரவதை படுத்தியமை தீவகத்தில் மனைவியின் கையை முறித்தமை,. வரணிப் பகுதியில் மனைவியின் வயிற்றில் மிதித்தமையினால் மண்ணீரல் வெடித்து சத்திர சிசிக்சை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறான சம்பவங்களின் மூலம் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துச் செல்கின்றன. துர்நடத்தையில் ஈடுபடுகின்ற கணவன்மாருக்கு தண்டனைகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நிலையிலும் பல  குடும்ப பெண்கள் கணவனை இன்னும் மதித்து வாழ்கின்றார்கள். அவ்வாறான சூழ்நிலையிலும் குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்கள் வன்முறைகள் தீர்வுக்கு கொண்டு வரப்படவில்லை' என அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் 'வன்முறைகள் கூடிக்கொண்டு செல்கின்றன. அதற்கான தீர்வுகள் என்ன என்பதை இனங்கண்டு அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

பசுக்களை கொல்வதற்கு யோசிக்கும் நாம், வன்முறைகளை செய்கின்றோம் என்றால் அதற்கான காரணம் யுத்தத்தினால் ஏற்பட்ட தாக்கமே.

குடும்ப பிணக்குகள் ஏற்படும் போது  அவை தீர்க்கக் கூடியதாக இருக்கின்றதா? இதனால்  பல்வேறு சமுகத்திடம் விரக்திகளும் குழப்பங்களும் ஏற்படுகின்றன.

கணவன் மதுபோதையில்  வரும்போது பெண்கள் பிரச்சினைகளை முன் வைப்பதால் வன்முறைகள் வெடிக்கின்றன.
வன்முறைகள் வெடிக்கும் போது குடும்பங்களுக்கு கருத்துக்களை சொல்வதற்கு சமூக அமைப்புக்கள் இல்லை.

குடும்பங்களை பிரிக்கும் நோக்கத்துடன்  இல்லாது கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண்ணுக்கு  ஆதரவான கருத்துக்களையும் பாதுகாப்பினையும் வழங்க சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும்.

கருத்துக்களை தெரிவிப்பதற்கு குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்னோ அல்லது இல்லற வாழ்கையில் நிலைத்து நிற்காத பெண்னோ முன்வரும் போது அது பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் வன்முறைக்கு தூண்டும் செயலாக மாறிவிடுகின்றது.

இவ்விடயத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கருத்துக்கள் பரிமாறப்பட்டால் குடும்ப வன்முறைகள் மற்றும் வன்முறைக்குள்ளாகும் பெண்களுக்கு சிறந்ததொரு தீர்வு கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட  பெண்களுக்கு தீர்வு கிடைக்க  சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து பெண் தலைமைத்துவத்தினை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதனால்  அவர்களின் வாழ்வை உயர்த்த முடியும்.

பெண்கள் மீதான வன்முறைக்கு தீர்வு என்பது கேள்வி குறியாகவே இருப்பதால், இதனை கருத்திற் கொண்டு சமூக அமைப்புக்கள் முன்வந்து செயற்பட வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X