2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜெ.டானியல்,எஸ்.கே.பிரசாத்)


பல்கலைக்கழக விரிவுரைகளை மீள ஆரம்பிப்பதற்கான  நடவடிக்கையை எடுக்கவேண்டும் எனக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.

கடந்த மூன்று மாதங்களாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தங்களுக்கான விரிவுரைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் மாணாவர்கள் கோரினர்.

சம்பவ இடத்தில் கலகம் அடக்கும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்ததுடன், பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலை விட்டு வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டால் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் இதன்போது  பொலிஸார் எச்சரித்தனர்.

இங்கு உரையாற்றிய யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ்.பிரசன்ன,


'ஆசியாவின் ஆச்சரியம் என்பது எமது இலவசக் கல்வியை இல்லாமல்ச் செய்வதா? மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் சுதந்திரமான செயற்பாடு அவசியம். பல்கலைக்கழக கல்வியில் அரசியல் தலையீடு எதற்கு? எங்களின் வளமான கல்வியே நாளைய சிறந்த சமுதாயத்தை உருவாக்கும். இஸட் புள்ளிக் குளறுபடிக்கு தீர்வு வழங்கி பல்கலைக்கழக அனுமதியை உடன் வழங்க வேண்டும்.

மஹிந்த சிந்தனை என்பது இலவசக் கல்வியை இல்லாது ஒழிப்பதா?

வரவு - செலவுத்திட்டத்தில் 6 வீதத்தை கல்விக்கு ஒதுக்கு. மாணவர்களின் உரிமையை மதித்து செயற்பட வேண்டியது இந்த நாட்டினுடைய கடமை. ஜனநாயக ரீதியில் எமது கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். அதற்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்கவேண்டும்' என்றார். 







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X