2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வடமாகாண ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வட மாகாண அதிபர்கள், ஆசிரியர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலியில் உள்ள இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடமாகாத்தில் உள்ள 12 வலயங்களைச் சேர்ந்த 250ற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு தாங்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தனர்.

குறிப்பாக போருக்குப் பிந்திய காலப்பகுதியில் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள், சம்பள முரண்பாடுகள், பரீட்சை வினாத்தாள்கள் திருத்தப்பணிகளில் ஈடுபடுபவர்கள் மீது மேற்கொள்ப்படுகின்ற அதிகாரங்கள், ஆசிரியர்களின் இடமாற்றம் என்பன பற்றி இங்கு விவாதிக்கப்பட்டன.

அத்துடன் வடமாகாணத்தில் உள்ள கல்வித்துறை சார்ந்தவர்களின் தன்னிச்சையான செயற்பாடுகள் காரணமாக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதில் பாரிய நெருக்கடிகளை ஆசிரியர்கள் எதிர்நோக்கி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இங்கு முன்வைக்கப்பட்டது.

இலங்கையில் எந்த மாகாணத்திலும் பின்பற்றப்படாத சட்டதிட்டங்கள் வடமாகாண கல்வித்துறையில் பின்பற்றப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X