2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழ் மாநாகர சபையின் எட்டாவது பொதுக்கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா இன்று சனிழக்கிழமை தெரிவித்தார்.

நீண்ட காலமாக தங்களுடைய உறவுகளைப் பிரிந்து சிறைகளில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களின் விடுதலையினை விரைவுபடுத்துமாறு  வலியுறுத்திய பிரேரணை ஒன்றினை ஆளும் கட்சி உறுப்பினர் கோமகன் ஏட்டாவது மாநகர சபையின் கூட்டத் தொடரின் போது கொண்டு வந்தார்.

அந்தப் பிரேரணையில், கடந்த ஜூன் மாதம் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்த சிறைச்சாலை ஆணையாளர் குலதிங்க, சிறைக் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்போவதாகவும், விடுதலை பெற விரும்பும் கைதிகள் கடிதம் மூலம் தமது விருப்பத்தினை தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார்.

அதற்கிணங்க தான் உட்பட பல தமிழ் அரசியல் கைதிகள் கடிதம் எழுதியிருப்பதாகவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலை அமைச்சர் கூறியதற்கமைய அரசாங்கம் கைதிகளின் விடுதலை தொடர்பான நடவடிக்கையை விரைவுபடுத்த வேண்டும் எனவும், தமிழ் அரசில் கைதிகளில் தானும் ஒருவன் என்ற நிலையில் சபையினூடாக இந்த பிரேரணையை முன்வைக்கிறேன் என்றும் அந்தப் பிரேரணையில் கோமகன் கூறியுள்ளார்.

மேலும், ஏனைய உள்ளூராட்சி மன்றங்களும் யாழ்.மாநகரசபையைப் பின்பற்றி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அந்தப் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரேரணை ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X