2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவன் கைது

Super User   / 2012 செப்டெம்பர் 03 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜெ.டானியல்)

மனைவியை தகாத வார்த்தையால் பேசிய நபரை வாளால் வெட்டிய கணவனை  கைது செய்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு இன்று திங்கட்கிழமை தெரிவித்தது.

குறித்த சம்பவம் யாழ். ஆறுகால் மடம் பகுதியில் இன்று திங்கட்கிழமை  நடைபெற்றுள்ளது. வாள்வெட்டுக்கு இலக்காகிய குறித்த நபர் கை மற்றும் வயிற்று பகுதியில் வாள் வெட்டு காயங்களுக்கு இலக்காகிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வாளால் வெட்டிய குறித்த பெண்ணின் கணவன் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையில் வாள் வெட்டுக் காயங்களுக்கு இலக்கானவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வாளால் வெட்டிய நபரை நாளை செவ்வாய்க்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0

  • Haniff Tuesday, 04 September 2012 05:34 AM

    இந்த மிலேனிய யுகத்திலும் வாள் வழக்கில் உள்ளதா....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X