2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொலை சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி

Super User   / 2012 செப்டெம்பர் 05 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

நபரொருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

கடந்த 09.02.2012 அன்று புன்னாலைக்கட்டுவன் திடற்புலம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் விஜயகுமார் என்பவரை அடித்து கொலை செய்ததாக குற்றஞ்;சாட்டப்பட்டு, சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட தந்தை மற்றும் மகன் ஆகிய இருவருக்கும் எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருவரும் விளக்கமறியிலில் வைக்கப்பட்டனர்.

கணவன், மற்றும் மகனுக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை சந்தேக நபர்களின் சார்பாக மனைவியினால் யாழ். மேல்  நீதிமன்றில் மேன் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கினை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் இரு சந்தேக நபர்களையும் தலா 30,000 ரூபா காசுப் பிணையிலும், 150,000 ரூபா பெறுமதியான 2 ஆட் பிணையிலும் செல்ல உத்தரவிட்டார்.

இவர்கள் சார்பில் சட்டத்தரணி மு.ரெமீடியஸ் பிணை மனுதாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X