2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய வர்த்தகசபை பிரதிநிதிகள் குழு - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 11 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


பொதுநலவாய நாடுகளின் வர்த்தகசபை தலைவர் மொஹான் போல் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சில் இன்;று வியாழக்கிழமை இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்திட்டங்களில் தொடர்பில் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் வாழ்வெழுச்சி (திவிநெகும) திட்டம் இதனால் மக்களுக்கு கிடைக்கப்பெற்றுவரும் நன்மைகள் இதற்கு அரசாங்கம் மற்றும் இந்திய அரசின் பங்களிப்பு என்பன தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு அமைச்சு மேற்கொண்டு வரும் பல்வேறு செயற்திட்டங்களை மேற்படி பிரதிநிதிகள் குழுவினர் பாராட்டினர்.

இக்குழுவினருடனான சந்திப்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, இலங்கை வங்கித் தலைவர் காலாநிதி காமினி விக்கிரமசிங்க,அமைச்சரின் ஆலோசகர் திருமதி.ஜெகராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X