2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உலக உளநல தின நிகழ்வு

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 13 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சுமித்தி,கிரிசன்)

'விரும்பத்தக்க மனிதனாய் நம்மை நாமே மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளிலான உலக உளநல நாள் நிகழ்வும , கண்காட்சியும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

மாகாண கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ். இந்து மகளீர் கல்லூரியில், மாகாண கல்விப் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், வடமாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் ப.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சி கூடத்தினை பார்வையிட்டார்.

அத்துடன், வடமாகாண பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்வுகளும், குறும்பட காட்சிகளும் இடமபெற்றன.

இந்நிகழ்வில், யாழ். போதனா வைத்தியசாலை உளமருத்துவ  நிபுணர் எஸ்.சிவயோகன், வடமாகாண விளையாட்டுத் துறை பணிப்பாளர் எஸ் அண்ணாத்துரை, உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வடமாகாண பாடசாலை மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X