2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பிரதேச சபை தவிசாளர் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்: த.தே.கூ

Kogilavani   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                           (எஸ்.கே.பிரசாத்)
நல்லூர் பிரதேச சபை தவிசாளர் வசந்தகுமார் மீதான தாக்குதலை கண்டித்து நாளை மறுதினம் யாழ்.பேரூந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்பாட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,

'ஜனநாயக வழியில் மக்களினால் தெரிவு செய்யப்பட்டவர்களை அரசாங்கம் அடக்கு முறை மூலம் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதோடு மக்களுக்கு சிறந்த சேயையை ஆற்றுவதற்கும் தடைவிதித்து வருகின்றது.

அரசின் இத்தகையை காட்டுமிராண்டித்தனத்தின் வெளிப்பாடுதான் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மீதான தாக்குதல் ஆகும்.

இந்த தாக்குதலை கண்டித்தும் அரச படையினரால் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நில அபகரிப்புக்கு எதிராகவும் எதிர்வரும் புதன்கிழமை 11.30 மணியளில் கண்டன ஆர்பாட்டம் நடத்த தீர்மானித்துள்ளது' என அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X