2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(நவரத்தினம்)

உள்ளூராட்சி வாரத்தையொட்டி வவுனியா நகரசபையினால் செயற்றிறனுள்ள உள்ளூராட்சி சேவையின் மூலம் சுபீட்சமான எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவையொன்றினை எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9 மணிமுதல் 3 மணி வரை வவுனியா குருமன்காடு கலைமகள் சனசமுக நிலையத்தில் நடத்தவுள்ளது.

இந்நடமாடும் சேவையின் மூலமாக ஆதனங்களுக்கான வரி செலுத்துதல், பெயர் மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளல், காணி பரிசீலனை செய்தல், கட்டிட அனுமதி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்தல், வியாபார உரிமம் வழங்குதல், துவிச்சக்கரவண்டி உரிமம் வழங்கல், முச்சக்கரவண்டிக்கான வருடாந்த தரிப்பிட அனுமதி வழங்குதல், நூலக அங்கத்துவம் புதிதாக பெறல் அல்லது புதுப்பித்து வழங்கல் போன்ற சேவைகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் அனுசரணையுடன் நடமாடும் பல் மருத்துவ சேவையும் நடமாடும் பொது மருத்துவ சேவையும் வழங்கப்பட்வுள்ள்தாகவும் நகரசபையின் தலைவர் ஐ.கனகையா தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X