2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பாலைதீவு, கற்கடதீவு கடற்பரப்புகளில் மீன்பிடிக்க அனுமதி மறுப்பு: மீனவர்கள் விசனம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 16 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

பாலைதீவு மற்றும் கற்கடதீவு கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு பாஸ் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலைதீவு மற்றும் கற்கடதீவு கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற தங்களுக்கு  இந்த கடல் பகுதிகளில் மீன்பிடிப்பதற்கான அனுமதியை கடற்படையினரும் பொலிஸாரும் மறுப்பதாகவும் இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

இவ்விடயம் குறித்து யாழ். மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவரிடம் கேட்டபோது,

'இணக்கப்பாட்டிற்கு பின்னரான காலப்பகுதியில் குருநகர், நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு பாலைதீவு மற்றும் கற்கடதீவு கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சமாதான காலத்தின் பின்னர் மீனவர்கள் இந்த கடல் பகுதிகளில் மீன்பிடிக்க தடை விதிப்பது நியாயமற்ற செயல்.

ஆனால் தென்பகுதி மீனவர்கள் இந்த கடல் பகுதிகளில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்,  வடபகுதி மீனவர்களும் யாழ். குடாநாட்டு மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X