2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலை வளாகத்தில் படையினர் குவிப்பு

Super User   / 2012 நவம்பர் 27 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், சுமித்தி)


யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பெரும் எண்ணிக்கையிலான படையினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை முதல் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாவீரர் தினத்தை விளக்கேற்றி அனுஷ்டிக்கலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே பெருமளவிலான இராணுவம் மற்றும் பொலிஸார் யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். பல்கலைக்கழக ஆண்கள் விடுதியின் மேல் மாடியிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அண்டிய வீதியால் செல்லும் பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் விசாரிக்கப்படுகின்றனர்.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இனந்தெரியாத நபர்களினால் இன்று பகிரங்கமாக துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியதவர்களே துப்பாக்கியை காட்டி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது  என எச்சரிக்கை விடுத்தாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • AJ Tuesday, 27 November 2012 01:27 PM

    எதை கொண்டு அடக்க முற்பட்டாலும் அதற்கு எதிராக எம் மக்கள் இருப்பார்கள். இலங்கையில் உலக பந்து எங்கிலும் நடந்துகொண்டு தான் இருக்கிறது. எம் மண்ணில் எம் மக்களுக்கான விடியல் பிறக்கும் வரை போராட்டம் தொடரும்.

    Reply : 0       0

    kamala Wednesday, 28 November 2012 07:22 AM

    மாவீரர்களா? அது யார்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X