2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அனுமதியின்றி பேரணி செல்ல முயன்றவர்களே கலைப்பு; எரிக் பெரேரா

Menaka Mookandi   / 2012 நவம்பர் 28 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸாரின் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், வீதியிலிறங்கி ஊர்வலம் செல்ல முற்பட்டதை அடுத்தே அவர்களை பொலிஸார் அங்கிருந்து கலைத்தனர் என்று யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

பேரணியில் ஈடுபட முயற்சித்தவர்களை பொலிஸார் கலைக்க முற்பட்ட போது அதற்கு செவிசாய்க்காத மாணவர்கள் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொண்டனர். இதனால் அவர்களை பலவந்தமாக விரட்டியடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்று பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் கூறினார்.

இதேவேளை, மாணவர்களைக் கலைப்பதற்காககச் சென்ற பொலிஸாரின் ஒத்துழைப்புக்காகவே இராணுவமும் அப்பகுதிக்குச் சென்றது என்று யாழ். இராணுவ தலைமையகம் - தமிழ்மிரரிடம் கூறியது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X