2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இராணுவ தளபதி தாக்கல் செய்த நஷ்டஈடு வழக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரியாவினால் நஷ்டஈடு கோரி உதயன் மற்றும் வலம்புரி பத்திரிகைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேற்படி வழக்கு இன்று யாழ். மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இராணுவ தளபதி சார்பாக நீதிச்சேவை ஆணைக்குழு சட்டத்தரணி கலிங்க இந்திரானா அடங்கிய சட்டத்தரணிகள் குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

தனது பதவிக்கு அவமானம் ஏற்படும் வகையில், உதயன் மற்றும் வலம்;புரி பத்திரிகைகளில் செய்தி பிரசுரித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு தரப்பினரதும் வாதப் பிரதிவாதங்களை கருத்திற்கொண்ட யாழ். மாவட்ட நீதிபதி அ.அ.ஆனந்தராஜா மேற்படி வழக்கினை ஏப்ரல் மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இராணுவத் தளபதி சார்பாக சட்டத்தரணிகளான சம்பத் விதர ரஞ்சித் ராஜபத்திரன, எஸ்.ஜயசிங்க நிரஞ்சன் ஸ்ரீவர்த்தன, உபேந்திரா குணசேகர ஆகியோரும், உதயன் பத்திரிகை சார்பாக முன்னாள் நீதிபதியும் சட்டத்தரணியுமான இ.த.விக்னராஜாவும் ஆஜராகியிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X