2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். மாவட்ட செயலக காணி அதிகாரி ராஜினாமா?

Super User   / 2013 மே 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். மாவட்ட செயலகத்தின் காணி சுவிகரிப்பு அதிகாரி ஆறுமுகம் சிவசுவாமி பதவி விலகியுள்ளதாக யாழ். மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் அலுவலகம் அமைச்சர் பண்டார தென்னகோணினால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து காணி அலுவலகராக ஆறுமுகம் சிவசுவாமி நியமிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னர், வலி வடக்கு பகுதியில் 6381 ஏக்கர் காணி படையினர் சுவிகரிப்பதாகவும் காணி அலுவலரின் கையொப்பத்துடன் நோட்டிஸ் ஒட்டப்பட்டது. அத்துடன், மானிப்பாய் பிரதேசத்திலும் காணி சுவீகரிப்பு நோட்டிஸ் ஒட்டப்பட்டன.

இந்நிலையில், யாழ். மாவட்ட காணி அபிவிருத்தி அலுவலர் ஆறுமகம் சிவசுவாமி கடந்த இரு வாரங்களுக்கு மேலாக அலுவலகத்திற்கு சமூகமளிக்கவில்லை.

வீட்டின் விஷேட நிகழ்வு ஒன்றினால் கடமைகளுக்கு சமூகமளிக்க முடியவில்லை என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் அவர் கடிதம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த காணி அலுவலர் தனது கடமையில் மீண்டும் இணைந்து கொள்வாரா என்பதும் சநதேகத்திற்கிடமாக இருப்பதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் கூறின.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X