2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஒரு சொட்டுக் கண்ணீர்விட முடியவில்லை: மாவை

Kanagaraj   / 2013 மே 18 , பி.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்
 
இறந்தவர்களுக்காக  ஒரு சொட்டுக் கண்ணீர் விட முடியாத அளவிற்கு இராணுவ அடக்கு முறையை இந்த அரசாங்கம் பிரயோகித்து வருகின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்கால் யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் மே 18 நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் இறந்து போனவர்களை நினைத்துவிடாக் கூடாது என்பதற்காக அரசாங்கமும் இராணுவமும் துயிலுமில்லங்கள்,நினைவிடங்கள் என்பற்றை அழித்து அதன் மேல் இராணுவ வெற்றிச் சின்னங்களை அமைத்துள்ளது.
இவ்வாறு இவர்கள் நினைவிடங்கள் துயிலுமில்லங்களை அழித்தாலும் எங்கள் இதயங்களில் இருந்து அந்த ஆத்மாக்களை மறக்க முடியாது.

வன்னியில் தமிழ் மக்களை கொத்துக்கொத்தாக கொன்றுவிட்டு அரசாங்கம் கொழும்பில் இராணுவத்தின் வெற்றியைக் கொண்டாடுகின்றது.

தமிழர் தாயகப் பிரதேசங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்த முடியாத படி இராணுவ அடக்கு முறை இங்கு பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இது ஒரு நாகரீகமற்ற ஒரு செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
யுத்தம் முடிந்த காலம் தொடங்கி எம்மை தோற்றுப் போன சமுதாயம் என்ற சித்தாந்தத்தை ஏற்படுத்தி; எம்மைப் பலவீனப்படுத்த வந்துள்ளார்கள் இதற்கு இங்குள்ள சிலரும் உறுதுணையாக இருந்துள்ளார்கள்.
 
2009 ஆம் ஆண்டு முன்னர் இருந்ததை விட கலை கலாச்சாரம்,பண்பாடு எல்லா வற்றையும் அழித்து இனப்படுகொலை மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது பௌத்த மதம்,பௌத்தவிகாரைகள், இன அடக்குமுறை, குடிப்பரம்பல் போன்ற அனைத்தையும் அரசு பயன்படுத்தி; எம்மை அடிமைப்படுத்த முனைகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X