2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வடக்கில் காணி சுவீகரிப்பை தடுக்க முன்வருமாறு வேட்பாளர்களிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி சுவீகரிப்புக்கு எதிராக குரல் கொடுத்து பொதுமக்களின் காணிகளை மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் யாழ். மாவட்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் காரியாலயத்தில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது வேண்டுகோள் அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 'வலி வடக்கில் இருந்து கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் விரைவில் விடுவித்து காணி உரிமையாளர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

காணாமல் போன உறவுகளை எண்ணி ஏங்கித் தவிக்கும் உறவினர்களுக்கு உரிய பதிலை உடனடியாக அளிக்க வேண்டும். அபிவிருத்தி என்ற போர்வையில், வடக்கின் நிலங்களை சூரையாடுவதை தவிர்க்க வேண்டும்.

போரின் பின்னரான சமூக, கலாச்சார சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருள் பாவணைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் மீண்டும் மீள்குடியேற்றப்பட வேண்டும் போன்ற 11 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியுள்ளனர்.

அந்த பத்திரிகையாளர் சந்திப்பில், யாழ். மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ஆர்.இன்பராஜ், தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.ஜேசுதாசன், யாழ். மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X