2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் பதற்றம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாணசபைத்தேர்தல் வாக்களிப்பில் இதுவரையிலும் வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னணியில் நிற்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தியதையடுத்தே ஆயுதம் தரித்தவர்கள் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அதனையடுத்தே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .