2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இளைஞர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்,நா.நவரத்தினராசா

யாழ். அளவெட்டிப் பகுதியில் இளைஞர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு  உள்ளாகியுள்ளதுடன்,  அவருடைய  மோட்டார் சைக்கிளும் நொறுக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாக கடமையாற்றும் இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

அளவெட்டிப் பகுதியில் உள்ள வயலை உழுவதற்காகச் இன்று செவ்வாய்க்கிழமை காலை சென்ற விவசாயி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று அடித்து நொறுக்கிக் காணப்பட்டதைக் கண்டுள்ளார். இது தொடர்பில் அவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று தெல்லிப்பழை பொலிஸார் மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.

தனது பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது,  தன்னை பின்தொடர்ந்து வந்த  இனந்தெரியாத நபர்கள் தன்னைத் துரத்தியதாகவும் இதனால் தான் அச்சமடைந்து வயல் வெளிக்கு ஓடியபோது அங்கு வைத்து தன்னைத் தாக்கிவிட்டு தன்னிடமிருந்த 20,000 ரூபாவை பறித்துள்ளதுடன், தனது மோட்டார் சைக்கிளையும்  அடித்து நொறுக்கியுள்ளதாகவும்  பாதிக்கப்பட்ட இளைஞர் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல்  செய்த முறைப்பாட்டில் கூறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .