2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

மிதி வெடியில் சிக்கி ஒருவர் பலி; இருவர் காயம்

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவ கருணாகரன்

முகமாலை பிரதேசத்தில்  உழவு இயந்திரமொன்று இன்று செவ்வாய்க்கிழமை மிதி வெடியில் சிக்கியமையினால் ஒருவர் பலியாகியுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பளை பிரதேச மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 30 வயதான எஸ்.சுதாகரன் என்பவரே பலியாகியுள்ளார். அல்லிப்பளையைச் சேர்ந்த 17 வயதான துரைசிங்கம் நிரோஜன் மற்றும் புலோப்பளை கிழக்கை சேர்ந்த 17 வயதான சி.குகராசா ஆகியோரே காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .