2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கிணறுகளில் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

George   / 2015 மார்ச் 14 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வின் மூலம் தெல்லிப்பழை முதல் கோப்பாய் வரையான 30 கிணறுகளில் எண்ணெய் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என   யாழ். மருத்துவ சங்கத்தலைவர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார்.

கிணறுகளில் எண்ணெய்க் கசிவு தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மத்திய சுகாதாரத் திணைக்களம் யாழ். மருத்துவ சங்கம் ஆகியன இணைந்து கடந்த மாதம் தெல்லிப்பழையிலிருந்து கோப்பாய் வரையான சந்தேகத்துக்கிடமான 30 கிணறுகளில் நீர் மாதிரியை சேகரித்து  அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்தன.

அவற்றை ஆய்வு செய்த பகுப்பாய்வு திணைக்களம் 30 கிணறுகளிலும் உள்ள நீரில் எண்ணெய், கிறிஸ் ஆகியன கலந்திருப்பதாக உறுதி செய்தது.

தெல்லிப்பழையில் இவற்றின் செறிவு அதிகமாக  இருப்பதாகவும் தெல்லிப்பழைக்கு அப்பால் உள்ள கிணறுகளில் செறிவு குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதனால் சுன்னாகம் பகுதியில் இருந்துதான் எண்ணெய் கசிவு வெளியேறியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்ணெய் கசிவு உள்ள கிணறுகளின் பாவனையை தடை செய்யாதது மிகவும் வேதனையானது. சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X