2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

தபால் ரயிலில் மோதி ஒருவர் பலி

Sudharshini   / 2015 மார்ச் 15 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

கிளிநொச்சி, பளை தர்மகேணி பகுதியிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை கடக்கமுயன்ற அதேயிடத்தை சேர்ந்த குருபரன் தவசீலன் (வயது 32) என்பவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் ரயிலில் மோதியதில், இவர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X