2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வீட்டிலுள்ளவர்களை கட்டிவைத்து நகை, பணம் கொள்ளை

George   / 2015 மார்ச் 15 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்லவநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் வரணி இடைக்குறிஞ்சி பகுதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை(14) இரவு முகத்தை துணியால் மறைத்தபடி நுழைந்த நால்வர் கொண்ட குழு, வீட்டிலிருந்தவர்களை அடித்து, கட்டிவைத்ததுடன் நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக கொடிகமம் பொலிஸார், ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தனர்.

வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகள் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் வந்த இந்தக் கொள்ளைக்கும்பல் தொடர்பில் வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X