2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வர்த்தக நிலையத்தை உடைத்து கொள்ளை

Sudharshini   / 2015 மார்ச் 15 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ற.றஜீவன்

பருத்தித்துறை நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் ஆகியவை சனிக்கிழமை (14) இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வர்த்தக நிலையத்திலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி கணக்கிடப்படவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

குறித்த வர்த்தக நிலையத்தின் பின்பக்க கதவை உடைத்து உள்நுழைந்து, பணப்; பெட்டியில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம், சிகரெட் பெட்டிகள் உட்பட  அத்தியாவசியப் பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இக்கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X