2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குருநகர், மடத்தடி பகுதியில் 1.5 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா பொதியுடன் இருவரை ஞாயிற்றுக்கிழமை (15) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி எஸ்.ஸ்ரீ கஜன் தெரிவித்தார்.

கைதான இருவரும், மீசாலை மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த 28, மற்றும் 32 வயதுடைய நபர்கள் என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

மடத்தடி பகுதியில் கஞ்சா விநியோதிப்பதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், அவ்விருவரையும் கஞ்சா பொதியுடன் கைதுசெய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைதான இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X