2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நல்லூரில் வாய்க்கால்கள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 16 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

நல்லூர் பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் கீழ், வாய்க்கால்கள் புனரமைப்புக்கு 2.7 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பா.வசந்தகுமார் திங்கட்கிழமை (16) தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், பிரதேச சபைக்கு உட்பட்ட 9 வாய்க்கால்கள் புனரமைக்கப்பட உள்ளன.

இதனடிப்படையில், கொக்குவில் பிரதேச சபையின் உப அலுவலக வாய்க்கால், திருநெல்வேலி வாழைக்குலை சந்தை வாய்க்கால், பூதவராயர்குள வாய்க்கால், பொற்பதி பிள்ளையார் வீதியிலிருந்து குளங்கரை வரையிலான வாய்க்கால், சம்பியன் வீதி பாலத்தில் இருந்து நந்தாவில் ஒழுங்கை வரையான வாய்க்கால், அம்பாள் சனசமூக நிலைய வாய்க்கால், கே.கே.எஸ் வீதி இராசாமில் வாய்க்கால், சபாபதி  வீதி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X