2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

விபத்தில் இருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 16 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். இணுவில் தனியார் வைத்தியசாலைக்கு அருகில்  திங்கட்கிழமை (16) இடம்பெற்ற வாகன விபத்தில், ஏழாலை மயிலணியைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.  

சுன்னாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன்; எதிரே வந்த 'கயஸ்' ரக வாகனம்  மோதியுள்ளது.   வேகமாக வந்த 'கயஸ்' ரக வாகனம் திடீரென நிறுத்த முற்பட்ட நிலையில்,  வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிளுடன் மோதியது எனவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X