2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வகுப்பு பகிஸ்கரிப்பு

Gavitha   / 2015 மார்ச் 16 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ்.பல்கலைக்கழக நுண்கலைப்பீட வரைதலும் வடிவமைத்தலும் மாணவர்கள், திங்கட்கிழமை (16) பகல் அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மருதனார் மடத்தில் உள்ள நுண்கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான பரீட்சைகள், கடந்த காலத்தில் சீராக நடைபெறவில்லை, ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீடத்தில் வரைதலும் வடிவமைத்தலும் துறைக்கு பரீட்சைகள் நடைபெறவில்லை, மேலும் தமது துறைக்கான இணைப்பாளரை நியமனம் செய்யவில்லை போன்ற குறைகளை நிவர்த்தி செய்யக் கோரி, இந்த அடையாள வகுப்பு பகிஸ்கரிப்பில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாகம் இதனை கருத்திற் கொண்டு, பிரச்சனைகளுக்கான தீர்வை முன்வைக்க தவறும் சந்தர்ப்பத்தில் ஏனைய பீடங்களும் இணைந்து எதிர்வரும் நாட்களில் காலத்தில் வகுப்பு பகிஸ்கரிப்பு மேற்கொள்ளவுள்ளதாக மாணவ சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X