2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மண்ணெண்ணெய் குடித்த குழந்தை உயிரிழப்பு

Kogilavani   / 2015 மார்ச் 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

குளிர்பாணம் என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று யாழ்.வல்வெட்டித்துறை, சமரபாகு பகுதியில் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பகுதியைச் சேர்ந்த விஜிதன் கனிஷ்கா என்ற குழந்தையே இவ்வாறு மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளது.

குளிர்பாண போத்தலில் மண்ணெண்ணையை கலந்து வைத்திருந்ததாலேயே இச்சம்வம் இடம்பெற்றுள்ளது.

குழந்தையை ஊறணி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X