2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாணவி துஸ்பிரயோகம்; இளைஞனுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவியொருவரை துஸ்பிரயோகம் செய்த 21 வயதுடைய சந்தேகநபரை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், திங்கட்கிழமை (16) உத்தரவிட்டார்.

சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையை, அடுத்த வழங்குத் தவணையில் சமர்ப்பிக்குமாறு மானிப்பாய் பொலிஸாருக்கு பணித்தார்.

மாணவியின் உறவினரான இந்த இளைஞன், கடந்த 15ஆம் திகதி மாணவி பாடசாலையை விட்டுவரும் போது, மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து மாணவியை துஸ்பிரயோகம் செய்துவிட்டு தப்பித்துச் சென்றார்.

மாணவியின் பெற்றோர் இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான இளைஞனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X