2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மாற்றுவலுவுடையோருக்கு புனர்வாழ்வு

Menaka Mookandi   / 2015 மார்ச் 17 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

'சமூக சேவைகள் அமைச்சு மாற்றுவலுவுடையோரின் சமுதாய அடிப்படையிலான புனர்வாழ்வு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு, வடமாகாணததுக்கு உட்பட்ட  மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு பிரதேச செயலகப் பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளதாக' இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் தேசிய இணைப்பாளர் எம்.ஆர்.சாந்தகுமார செவ்வாய்க்கிழமை (17) தெரிவித்தார்.

'யாழ்ப்பாணத்தில் நல்லூர் கிளிநொச்சியில் கண்டாவளை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு,  வவுனியாவில் வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் மன்னாரில் மன்னார் நகரப் பிரதேச செயலகப் பிரிவும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்டுள்ள இந்த பிரதேச செயலகப் பிரிவுகளில் மாற்றுவலுவுடையோர்  தொடர்பான வேலைத்திட்டங்கள் விசேடமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதுபோல நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக சேவைகள் அலுவலர், சமூக சேவை உதவியாளர், அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் ஆகியோருக்கு 3 நாள் செயலமர்வின் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

வடமாகாணத்தைச் சேர்ந்த 5 பிரதேச செயலகப் பிரிவு அலுவலர்களுக்கும் எதிர்வரும் 20, 21, 22 ஆகிய தினங்களில் கொழும்பு, மாலம்பே, தலாகேன எனுமிடத்திலுள்ள சமுதாயக் கல்விப் பயிற்சி நிலையத்தில் செயலமர்வு நடைபெறவுள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X