Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 17 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களினால் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 7பேர் கொண்ட குழுவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நியமித்துள்ளார் என வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (17) அவைத்தலைவர் தலைமையில் நடைபெற்றபோது இவ்வாறு தெரிவித்தார்.
'இந்தக் குழுவில் மரியாம்பிள்ளை அன்டனி ஜெகநாதன் (பிரதி அவைத்தலைவர்), பாலச்சந்திரன் கஜதீபன், அரியகுட்டி பரஞ்சோதி, விந்தன் கனகரத்தினம், ஆயுப் அஸ்மின், தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்' என்று அவர் கூறினார்.
'முறையற்ற நியமனம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தக் குழுவுக்கு 3 மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் நியமனம் பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அறிக்கையை அமைச்சரவையின் பார்வைக்கு கொடுத்த பின்னர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்' என அவைத் தலைவர் மேலம் கூறினார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025