2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சந்தேகநபருக்கு பிணை வழங்கியவர் கைது

George   / 2015 மார்ச் 19 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

26 குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பிணை வழங்கிய, புத்தூர் மேற்கு பகுதியை சேர்ந்த ஒருவரை, வியாழக்கிழமை(19) கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக பொலிஸார் கூறுகையில், வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தமை, கோப்பாய் பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் மோசடிகளில் ஈடுபட்டமை ஆகிய 26 குற்றச்சாட்டுக்களில் கைதாகிய சந்தேகநபர், நீதிமன்றத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபர் தொடர்பான வழக்கு நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் போது, சந்தேகநபர் அதற்கு சமூகமளிக்காமல் தலைமறைவாகியிருந்தார். இவ்வாறு 3 வருடங்களாக சந்தேகநபர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

சந்தேகநபரைக் கைது செய்யுமாறு பொலிஸ் நிலையங்களுக்கும், மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு நீதிமன்றம் பணித்தது. 

சந்தேகநபர் தொடர்பான தகவல்களைப் பெறமுடியாது போனதால், சந்தேகநபருக்கு பிணை வழங்கிய நபரை இன்று கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X