2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பழக்கடையில் பாக்கு விற்றவருக்கு அபராதம்

George   / 2015 மார்ச் 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன் 

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் பாபுள் எனப்படும் போதைப்பொருள் கலந்த பாக்கை மாணவர்களுக்கு விற்பனை செய்த பழக்கடையின் உரிமையாளருக்கு 3,000 ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், வியாழக்கிழமை (19) தீர்ப்பளித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்துக்குச் சென்று, பழங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 20 பாபுள் கலந்த பாக்கு பைக்கற்றுக்கள், பாபுள் போத்தல் ஆகியவற்றை புதன்கிழமை(18) பொலிஸார் கைப்பற்றியதுடன், கடையின் உரிமையாளரையும் கைது செய்தனர். 

இதனையடுத்து, சந்தேகநபரை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோது அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X