2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மயக்க மருந்து கொடுத்து வர்த்தகரின் மோதிரங்கள் அபகரிப்பு

George   / 2015 மார்ச் 19 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ற.றஜீவன் 

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு புதன்கிழமை(18) தேநீரில் மயக்கமருந்து கலந்துகொண்டு அவர் அணிந்திருந்த மோதிரங்கள் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பாக பொலிஸார் மேலும் கூறுகையில், மேற்படி வர்த்தகர், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வெங்காயம் விற்பனை செய்யும் தொழில் ஈடுபட்டு வருகின்றார். 

புதன்கிழமை(18) இவரது கடைக்கு சென்ற புத்தளத்தைச் சேர்ந்த இருவர் தங்களுக்கு வெங்காயம் வேண்டும் எனக்கேட்டுள்ளனர்.

வெங்காயம் வருவதற்கு தாமதமாகும் எனக்கூறிய வர்த்தகர் அதுவரையில், இரண்டு பேரையும் தனது கடையில் இருக்குமாறு கூறியுள்ளார். 

இருவரில் ஒருவர் அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்று தேநீர் வாங்கிக் கொண்டு வந்து தாங்களும் அருந்தி வர்த்தகருக்கும் கொடுத்துள்ளார். 

இதனையடுத்து, தேநீர் அருந்திய வர்த்தகர் மயங்கி வீழ்ந்துள்ளார். புத்தளத்தைச் சேர்ந்த இருவரும் வர்த்தகரின் மோதிரங்கள் இரண்டை அபகரித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

இது தொடர்பில் வர்த்தகரின் மகன், புதன்கிழமை (18) மாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். 
மயங்கி நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வர்த்தகர், இன்று வியாழக்கிழமை(19) காலையில் கண்விழித்துள்ளார். 

இதன்போது, அவரிடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொண்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X