2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நுகர்வோர் சட்டத்தை மீறிய வர்த்தகர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 மார்ச் 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறிய அளவெட்டி, வட்டுக்கோட்டை, பண்டத்தரிப்பு பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் கறுப்பையா ஜீவராணி வியாழக்கிழமை (19) உத்தரவிட்டார்;.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் கடந்த மாதம் 16ஆம் திகதி நடத்திய சோதனையில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, விலைப்பட்டியல் இல்லாது விற்பனை செய்தமை, நிறைகுறைந்த பாண் விற்பனை செய்த வர்த்தகர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் வியாழக்கிழமை (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விலைப்பட்டியலை பாhர்வைக்கு வைக்காத 4 வர்த்தகர்களுக்கு தலா 5000 ரூபாயும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபாயும், நிறைகுறைந்த பாண் வைத்திருந்த வெதுப்பக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X