2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நாய் விறாண்டியவர் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நாய் விறாண்டிய யாழ்ப்பாணம், ஏழாலை வடக்குப் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (19) திடீரென உயிரிழந்துள்ளார் என்று யாழ் போதனா வைத்தியசாலையில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் கமல்ராஜ் (வயது 46) என்பவரே உயிரிழந்தார்.

வீதியால் சென்ற இவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் நாயொன்று விறாண்டியுள்ளது. இதற்கு சிகிச்சை பெறாமல் இருந்த அவருக்கும் புதன்கிழமை (18) காய்;ச்சலும் உடம்பு இயலாமல் வந்துள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்க முடியாது எனக் கூறப்பட்டதை அடுத்து, மீண்டும் வியாழக்கிழமை (19) யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X