2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நிலத்தடி நீரிலுள்ள மாசை அகற்றுவதற்கு யாழ் மருத்துவபீடம் நடவடிக்கை

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

சுன்னாகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளின் நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய், ஐதரோசன் காபன் போன்வற்றை அகற்றுவதற்குரிய கருவியை யாழ். மருத்துவபீடம் வடிவமைத்துள்ளதாகவும் விரைவில் உரிய அதிகாரிகளுக்கு காண்பித்து அது தொடர்பில்  விளக்கமளிக்கப்பட உள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதி கலாநிதி எஸ்.பாலகுமார் வியாழக்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

மருத்துவபீடம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் சில கிணறுகளில் கலந்துள்ள எண்ணெய்  ஐதரோ காபன், பாரலோகங்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. நொதேன் பவர் மின் நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள கிணறுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றது.

தண்ணீரில் கலந்துள்ள மாசை அகற்றுவதற்கு இலங்கையில் தொழில்சார் வல்லுநர்கள் இல்லை. வெளிநாட்டில் இருந்து அவர்களை வரவழைத்த பின்னர், நீரில் எண்ணெய் கலந்தது தொடர்பான சகல முடிவுகளையும் திடமாகக்கூறமுடியும்.

அமெரிக்க, அவுஸ்திரேலிய நாட்டிலுள்ள இலங்கைத் தமிழர்கள் வடமாகாண சபைக்கு அனுப்பியுள்ள எண்ணெய் மாசைக் கண்டறியும் கருவியை மருத்துவபீடத்துக்கு சில நாட்களுக்கு தருமாறு வடமாகாண விவசாய அமைச்சரை கேட்டுள்ளோம். அவர் தருவதாக உறுதியளித்துள்ளார்.

மண்ணில் இருக்கும் பெற்றோலிய ஐதரோ காபனை நுண்ணங்கிகளை பாவித்து அகற்றுவதற்காக பொறிமுறையை அமைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். விரைவில் எமது ஆராய்ச்சி வெற்றிபெறும் என நம்புகின்றோம் என தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X