2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

வீடுகளை புனரமைக்க அனர்த்த நிவாரணக் கொடுப்பனவு

Menaka Mookandi   / 2015 மார்ச் 20 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 13பேருக்கு அனர்த்த நிவாரணக் கொடுப்பனவாக வீடுகள் புனரமைக்க தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் கோபாலப்பிள்ளை நாகேஸ்வரன் வெள்ளிக்கிழமை (20) தெரிவித்தார்.

சமூக சேவைகள் உத்தியோகத்தர், வெளிக்கள மேற்பார்வை செய்து தகுதியான பயனாளிகளை தெரிவு செய்தனர். உரிய பிரிவின் கிராம அலுவலர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் பேரில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

எதிர்பாராத தீ விபத்து, கடுங்காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டவர்களே இந்த நிதி உதவியைப் பெறவுள்ளனர். இவர்கள் வீடு புனரமைப்பை உரிய முறையில் செய்தால் அவர்களுக்கு இரண்டாம் கட்ட நிதி தலா 10,000 ரூபாய் நன்கொடை வழங்கப்படும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X